breakfastlunchdinner

Thursday, April 23, 2009

தோசாவக்காய...

என்னது தோசையில் ஆவக்காயான்னு குழம்பாதீங்க.
மஞ்சள் வெள்ளரிக்காயில் போடும் ஊறுகாய் இது.
(ஆந்திரா ஷ்பெஷல்னு சொல்லணுமா!!!))


மாங்காய் ஆவக்காயை விட வேலையும் குறைவு,
ஒரே நாளில் உபயோகிக்கவும் துவங்கலாம்.
அதான் இந்த ஊறுகாயின் ஷ்பெஷாலிட்டி.

செய்வது எப்படின்னு பாப்போம். தேவையான
பொருட்கள் இதோ:



INGREDIENTS பட்டியல் மஞ்சள் வெள்ளரிக்காய் -1, நல்லெண்ணெய் 1 கப், அதே கப்பில் அளந்த மிளகாய்த்தூள் 1 கப், 1 கப் உப்பு, கடுகுபொடி 1 கப்






மஞ்சள் வெள்ளரிக்காயில் விதையை எடுத்துவிட்டு
படத்தில் காட்டியிருப்பது போல் வெட்டி வைத்துக்கொள்ளவும்.





வெள்ளரிக்காய் துண்டங்களுடன் உப்பு,காரம், கடுகு பொடி,
எண்ணெய் எல்லாம் சேர்த்து கலக்கி பாட்டில் போட்டு வைக்கவும்.



அடுத்த நாள் ஊறுகாய் ரெடி. சுடு சோற்றில் ஊறுகாய் போட்டு
நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால்......... :)))



கடுகு பொடி கிடைக்கவில்லை என்றால் கடுகை மிக்சியில்
சுற்றி நாமே பொடி செய்து கொள்ளலாம்.

(ஆந்திரா ஷ்பெஷல் உணவுகள் இந்த ப்ளாக்கில்
தொடரும் :)) )

Thursday, April 2, 2009

ராகி சங்கட்டி


INGREDIENTS பட்டியல் ராகி(கேப்பை மாவு) 1 கப், சமைத்த சோறு - 1 கப், உப்பு தேவையான அளவு, நெய் - 1 ஸ்பூன்.



செய்முறை:

கொஞ்சம் குழைவாக சமைத்த சோற்றில் தேவையான அளவு
உப்பு், 1 கப் தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும்.

1 கப் ராகிக்கு 3 கப் தண்ணீர், தேவையான உப்பு சேர்த்து
கரைத்து வைக்கவும்.

அடுப்பை பற்றவைத்து, அடி கனமான பாத்திரம் வைத்து
அதில் கரைத்து வைத்திருக்கும் சோற்றை போட்டு கிளறவும்,
கொஞ்சம் கொதிக்க ஆரம்பிக்கும் நேரத்தில் கரைத்து
வைத்திருக்கும் கேப்பை மாவையும் ஊற்றி கைவிடாமல்
கிளறி, பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்பொழுது நெய்
சேர்த்து மேலும் கிளறி இறக்கினால் சங்கட்டி ரெடி.

இதற்கு சரியான ஜோடி பூண்டுக்குழம்பு அல்லது வடைகறி.


கேப்பை உடலுக்கு மிகவும் நல்லது. குளிர்ச்சி தரும்.

சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு இவ்வுணவு மிக
உதவும்.


1.சமைத்த சோறு இல்லாவிட்டால் அரிசியை
மிக்சியில் போட்டு உடைத்து(அரிசி உப்புமா
செய்யும் பதம்) சோறு சமைத்து சேர்க்கலாம்.
Google
:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines